Tuesday, July 12, 2011

சங்கீதச் சாரல் - 1

ராகம்: தோடி
தாளம்: ரூபகம்

பல்லவி:

ஆடும் சிதம்பரேசா ஆலவாயுறை சோமேசா
தஞ்சை வளர் ப்ருஹதீசா தயைகூர்ந்து அருள்புரிவாய்

அனுபல்லவி:

அருவமாய் அருமருந்தாய் ஆருயிராய் அகிலமுமாய் 
அம்பலத்திலும் ஏழை வேங்கடேசன் உள்ளத்திலும் (ஆடும்)

சரணம்:

அன்புடன் உனை நினைந்து அத்வைத இன்பம் கொண்டு
ஆதாரம் நீயென்று அடிமலரை நிதம் பணியும்
அடியாரவர் மனமதனில் அதியத்புத நடனமிட்டு
அல்லல்களை தீர்த்தோம் தீர்த்தோம் தீர்த்தோம் ஆனந்தம் தந்தோம் தந்தோம் என்று (ஆடும்)

2 comments:

  1. இறைவன் அருள். ஒரு நாள் காலை தோடி பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அதுவாய் உதித்தது.

    ReplyDelete

நீங்கள் இவற்றை விரும்பக்கூடும்
Related Posts Plugin for WordPress, Blogger...