Thursday, June 30, 2011

வெள்ளிகிழமை விடியல்

(சாப்ட்வேர் பெண்ணின்) வெள்ளிகிழமை விடியல்

புதுப்புனல் மொண்டு வாசல் தெளித்து
புத்தரிசி மாவால் அழகுக்கோலம் இட்டு
வெள்ளியை வரவேற்க காவி இட்டு
வெறுந்தரையை பளிச்சென்று அழகாக்கி
இல்லத்து வேலைகளை பாங்குடன் துவங்கி
இப்படி இருந்த வெள்ளியின் அருமை விடியல்

எப்படி மாறியது இன்றைய சாப்ட்வேர் உலகில்..

எப்போதும் இருக்கும் டிரெஸ் கோடு இன்றில்லை
மாலையில் பார்ட்டி யாருடனென்று கவலை
மனமதில் சனி வரப்போகும் சந்தோசம்
சனி வந்த மகிழ்ச்சி ஞாயிறு வரை தாங்கும்
சாப்ட்வேரில் வேறு விதமாய் ஒரு பெண்ணடிமை
புரியாமல் மதிகெட்டு வாழ்வதே மக்கள் நிலைமை

புரிந்தால் தண்டப்பயல் புரியாவிட்டால் கேனப்பயல்...

கூகிள் பிளஸ் - 1

மாயாண்டி: ஏன்டா குப்புசாமி ஏதோ கூகிள் பிளசாம்ல.. அதுல பஸ் ஒட்டுலாமாம். பிளஸ் 1 போடுலாமாம்.. பிகர புடிச்சு சுத்தி வட்டம் போடுலாமாம்.. பிளாக் லிங்க் பண்ணலாமாம். ட்வீட் பறக்க வுடுலாமாம்.. ஏல நீ கேள்வி பட்டியாலே...

குப்புசாமி: ஆமா மக்கா.. என் மச்சான் கூட ஏதோ கூகிள் பிளஸ், யாகூ மைனச்சுனு சொல்லிட்டு இருந்தான்.. இது பத்தி எதுனா சேதி தெரிஞ்சா எனக்கும் சொல்லுலே..

மாயாண்டி: அட அது தெரிஞ்சா நா எதுக்கு கேக்குதான்.. சேதி தெரியாமதானலே உன்னாண்ட கேக்குதேன்..

குப்புசாமி: அப்போ ஒன்னு பண்ணுவோம்கரேன்.. நேரா நம்ம சொறிமுத்து கிட்ட போவம்.. பயபுள்ள அம்புட்டு சேதியும் புட்டு புட்டு வேப்பாருலே..

(இரண்டு நண்பர்களும் சொரிமுத்துவை தேடிச் செல்கின்றனர்.)

குப்பு: ஏல.. நம்ம சொரிமுத்து அங்கன இருக்குறாருடே.. ஏல சொரிமுத்து இங்குட்டு ஒரு எட்டு வர்றது..

சொரிமுத்து: என்னய்யா.. ரெண்டு மெத்த படிச்சவங்களு ஒன்னா வந்துருக்கீய.. என்ன சங்கதி..

மாயா: சொறிமுத்து அது எதோ கூகிள் பிளசாம்லையா அத பத்தி கொஞ்சம் சொல்லுதே கேப்போம்..

சொரிமுத்து: ஓஹோ.. சோழியன் குடுமி சும்மாவா ஆடும்.. இதுதானா நீங்க வந்த சேதி.. இப்புடி உக்காருங்க சொல்லுதேன்..

(சொரிமுத்து தனது உரையை தொடங்குகிறார்)

ஒரு காலத்துல தே.. யாகூ மேசென்ஜர் நு ஒன்னு இருந்திசிடே.. பொட்டு பொடுசெல்லாம் அங்கனதான் போய் ஒன்னோட ஒன்னு மொக்க பொட்டுன்னு இருக்கும்..

மாயா: ஏலே.. கூகிள் பிளஸ் நா என்னனு சொல்லுதே அத வுட்டு புட்டு ஏதோ வரலாறு சொல்லிட்டு இருக்குதே..

சொறி: யோவ் மாயாண்டி.. சும்மா மூடிட்டு கத கேளுடே.. ஓவரா பேசுனே மூஞ்சி மோகர எல்லாம் பெத்து புடுவேன்..

(சொறிமுத்து தொடர்ந்தார்)

அந்த யாஹூ லே, நீ முன்ன பின்ன தெரியதாவக கூடலா சாட் ரூம்புலே பேசலாமுடே.. ASL னு கேப்பானுகே.. 

குப்பு: ஆமாயா.. நீ 19 , male , இந்தியானு சொல்லிபுட்டியோ தொலஞ்சிது ஒரு பய உனண்ட பேச மாட்டான்..

சொறி: கூட கூட பேசாதே.. கூட கூட பேசாதே (கிட்ட தட்ட விஜயகாந்த் தனது வேட்பாளரை அடித்தது போல அடித்தார்.)

குப்பு: அண்ணே நீங்க சொல்லுங்கண்ணே.. மன்னிச்சுக்கங்கண்ணே..

சொறிமுத்து தொடர்ந்தார்..

இந்த பயபுள்ளைக எதையுமே முழுசா பேச மாட்டாணுவ.. இப்போ என் பேரு சொறிமுத்து இல.. நா அங்கன "சொர்ஸ்" னு தான் சொல்லிக்குவேன். அப்போதான் மவுசு இருக்கும்.. அதே மாதிரி சிரிக்கணும்னா லொள் னு நாய் மாற்றி குறைக்கணும்..

மாயாண்டி: அண்ணே.. அப்போ நா "மாயிஸ்" ஆ?

சொறி: ஏன் "நாயி' ஸ்" னு வேச்சுகொயேன் சரியா இருக்கும்..

மாயா: அத உடுடே.. லொள் நா என்னடே..

சொறி: லொள் நா நாய் கொரைக்கறது இலே.. Laughing out loud .. அதே மாதிரி ரோபல்னு கூட ஒன்னு இருக்குது.. அத விடு.. யாகூ எல்லாருக்கும் போர் அடிச்சப்ப.. ஆருகுட்டுன்னு ஒருத்தன்.. தன்னோட காண போன பிகர கண்டுபிடிக்க ஒரு சாப்ட்வேர் கண்டுபிடிச்சான். எல்லாரும் யாகூவ மறந்துட்டு ஆருக்குட்டுகு போனானுவ..

மாயா: எனக்கு தேரியுமுடே ஆருக்குட்டுல அவனவன் பாம் போட ஆரம்பிச்சான்.. கடசியா பிரேசில் காரன் ஒருத்தன்.. பாம் சபடோ னு ஒன்னு போட்டான்.. ஆருகுட்டுல இருந்த கொஞ்ச நஞ்ச கும்பலும் சேது போய்டுச்சி..

சொறி: அட தீவட்டி தலையா செத்து போவலடா.. எல்லாம் வேற எடத்துக்கு போய்டுச்சி..

குப்பு: எங்கண்ணே போச்சு..

சொறி: அது பேஸ்புக் னு ஒன்னுடா அங்கன போச்சு..

குப்பு: ஆருக்குட்டு பிகர கண்டுபிடிக்க வந்துச்சி.. இந்த பேஸ்புக் எதுக்குன்னே வந்துச்சி.. எள்ளுதான் எண்ணைக்கு காயுது எலி புலுக்க எதுக்கு காயுதாம்..

சொறி: ரொம்ப பேசிட்டேண்டே.. வாயி வலிக்கி.. நா போயி சோடா கீடா குடிசுன்னு வரேன்.. அப்புற மேல புல்லா பேசுவோமுடே..

வரட்டா என்று சொறிமுத்து கிளம்பினார்..

(இன்னும் இரண்டு பாகங்களில் முடியும்.)

தண்டப்பயல்

தண்டப்பயல் ஆகிய நான் இனி உங்களுடன்....

இன்று முதல் இந்த ப்ளாகின் மூலமாகவும் தொந்தரவுகளைத் தரப் போகிறேன். இந்த வலைப்பூவில் உள்ள பதிவுகள் அனைத்தும் தமிழிலேயே பதிவு செய்யப்படும்.

சில சமயம் இனிமையான தென்றலாகவும், மிதமான காற்றாகவும், அவ்வப்போது பெரும் புயலாகவும் வீசும் காற்றை போல, இந்த தண்டப்பயலாகிய நானும் சில சமயம் மொக்கை கவிதையாய், சில சமயம் சிந்திக்க வைக்கும் கட்டுரையாய், தூங்க வைக்கும் கதையாய் வருவேன்.

அதிகம் பேசாமல் முகப்புரையை இத்துடன் முடித்துக் கொண்டு.. ஆஹ்ன்ன்ன் மறந்துட்டேன் ஒரு வரவேற்புக் கவிதை...

தண்டப்பயல்..

எல்.கே.ஜி யில் கிளாசில் கடைசி ரேங்க்; அக்கா சொன்னாள் தண்டப்பயல்

கடையில் சில்லறை பாக்கி வாங்க மறந்தேன்; அம்மா சொன்னாள் தண்டப்பயல் 

பக்கத்துக்கு வீட்டு பெண்ணை சைட் அடித்தேன்; அப்பா சொன்னார் தண்டப்பயல்

கிரிக்கெட் மாட்சில் தோற்று போனேன்; அண்ணா சொன்னான் தண்டப்பயல்

முத்தம் கொடுக்க ரொம்ப தயங்கினேன்; காதலி சொன்னாள் தண்டப்பயல்

தண்ணி அடிக்க மாட்டேன் என்றேன்; நண்பன் சொன்னான் தண்டப்பயல்

திருமணம் வேண்டாம் என்றேன்; பாட்டி சொன்னாள் தண்டப்பயல்

வேலை தேடிக் கொண்டு இருந்தேன்; உலகம் சொன்னது தண்டப்பயல்

தண்டப்பயல் என்றால் என்னவென்று யோசித்தேன்; என்னை நானே சொன்னேன் தண்டப்பயல் 

-----------------------------
கவிதை முடிஞ்சு போச்சு.. சிரிச்சுட்டு கமெண்ட் போடுங்க.. :)

நீங்கள் இவற்றை விரும்பக்கூடும்
Related Posts Plugin for WordPress, Blogger...