இன்று மக்கள் அனைவரிடமும் ஒரு கருத்து பரவி இருக்கிறது. "அது என்னவோ சாப்ட்வேர் என்ஜினியராம். கம்ப்யூட்டர் படிப்பாம், கை நிறைய சம்பளமாம். பொழுதுக்கும் கூத்து தான் கும்மாளம் தான். சனிக்கிழமை ஆனா சரக்கு என்ன குட்டி என்ன குஜால்டியா இருக்காங்கப்பா."
இந்த கருத்து முழுக்க பொய் இல்லை என்றாலும் முக்கால் வாசி பொய் தான். என்னடா இவன் நேர் மாறாக பேசுறானேனு நினைக்க வேண்டாம். வாங்க நாம உண்மையான சாப்ட்வேர் எஞ்சினியரின் நிலையை பார்ப்போம்.
முக்காலே மூணு வீசம் சாப்ட்வேர் மக்கள் ஒரு சந்நியாச வாழ்க்கையே வாழ்கின்றனர். நித்யானந்த மாதிரி இல்லீங்க, நிஜமான சந்நியாசம். சந்நியாசம் என்பது என்ன? சுய விருப்பு வெறுப்பு ஆசா பாசங்களை துறப்பது. சாப்ட்வேர் மக்களுக்கு அது மிகவும் பழகிப்போன ஒரு விஷயம்.
இது ஏதுடா வம்பா போச்சு. ஏர் இழுத்து விவசாயம் பண்ணுறது எவ்ளோ கஷ்டம் தெரிமா, நெசவுத்தொழில் எவ்ளோ கஷ்டம் தெரிமானு சண்டைக்கு வரவேண்டாம். ஒரு கௌண்டமணி காமெடி நினைவுக்கு வருகிறது.
கௌண்டமணி ஒரு சலூன் கடை வைத்து இருப்பார். முடி வெட்டி கொள்ள வரும் கஸ்டமர் ஒருவர், "இந்த மில்லுல வேல பாக்குறதுக்கு சரைக்கலாம்" என்பார். அவரிடம் கவுண்டமணி "சரைக்கரதுன்னா அவ்ளோ கேவலமா போச்சா" என்று சண்டை இடுவார். அதுபோல சும்மா உட்கார்ந்து இருப்பது முதல் அனைத்து வேலையுமே கடினமானது தான் ஏதானும் ஒரு விதத்தில்.
இந்த சாப்ட்வேர் வேலையில் உடலைத் தவிர மீதி அனைத்திற்கும் பாரம், கவலை என அனைத்து கஷ்டங்களும் உண்டு. உடலால் காயப்படுவதை விட, கஷ்டப்படுவதை விட, மனதாலும், எண்ணத்தாலும் கஷ்டப்படுவது கொடுமையானது இல்லையா.
டெலிவரி நேரம் என்றால் ராப்பகலாய் ஊண் உறக்கம் விட்டு வேலை, மனஜெரிடமிருந்து சுடுசொல் என பல தொல்லைகள். ஊரில் ஒரு வசனம் சொல்வார்கள் "பாம்பிற்கு முகம் காட்டும், மீனிற்கு வால் காட்டும்" என்று. மீனொன்று உண்டாம், அதன் முகம் பாம்பு போல் இருக்குமாம், வால் மீன் போல் இருக்குமாம். பாம்பு வந்தால் முகத்தை காட்டுமாம், பாம்பு தன் இனமென்று ஒன்றும் செய்யாமல் செல்லுமாம். அதேபோல மீனிற்கு வாலை காட்டுமாம். இப்படி இருந்துகொண்டு ஆப்பு வைக்கும் டீம் லீடர்கள், உடன் வேலை பார்ப்பவர்களுக்கு பஞ்சமில்லை இந்த துறையில்.
உண்மையை கூற வேண்டுமானால் சுய விருப்பு வெறுப்புகளை தூர போட்டு விட்டுதான் வேலை பார்க்கின்றனர் பெரும்பாலானோர். நம் தமிழ் நாட்டை சேர்ந்த சாப்ட்வேர் இளைஞர்களோ இளைஞிகளோ தாங்கள் விரும்பிய ஒரு வாழ்க்கையை வாழ்வதாய் தெரியவில்லை. குறைந்த பக்ஷம் ஆண்கள் தாங்கள் விரும்பிய ஒரு வாழ்வை வாழவில்லை. இந்தத் துறையில் ஆண்கள் பாவம் செய்தவர்கள். விழி ஓரம் ஒரு துளி நீர் கசியவைக்கத் தெரியாததால் அவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
அதனால் பெண்களுக்கு தொல்லைகள் இல்லை என்று கூறவில்லை. பெண்களுக்கு இத்துறையில் இருக்கும் பாலிடிக்ஸால் பாதிப்புகள் கம்மி என்றே கூற வருகிறேன்.
(சந்நியாசம் தொடரும்..)
Romba Nalla irukku da.. Thodarga Un eluthu pani.. All the best.. :)
ReplyDeleteromba thanks daa..
ReplyDeleteஉண்மை......
ReplyDeleteஒவ்வொரு தொழிலிலும் , அவரவர் பங்குக்குச் சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன......
எனது பல நண்பர்கள் அவதிபட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்....
”கூலிக்கு மார் அடிப்பது” பழங்காலம் தொட்டே இருந்து வருவது தான், என்ன இப்பொழுது உத்திகள் மாறி இருக்கின்றன அவ்வளவே....
முன்பு “மறைவாய்” நடந்தது இப்பொழுது “வெளிப்படையாக” நடக்கின்றது....
கூலியின் இலக்கம் கூடி இருக்கின்றது அவ்வளவே...
நான் வேண்டுவது கற்றுக்கொண்டதை கடமைக்காக செய்யாமல், காரணம் கண்டு, நின் கருத்துக்களை புகுத்தி சாதனை செய்யுங்கள்..... அது எந்த தொழில் என்றாலும்.....
நின் கருத்துக்களை புகுத்தி சாதனை செய்யுங்கள்..... அது எந்த தொழில் என்றாலும்.....////
ReplyDeleteஇந்தத் துறையில் அதை செய்ய முடியாது.. :( :( ஏன் என்பதை இனி வரும் பதிவுகளில் சொல்கிறேன்