சோடா குடிக்கப்போன சொறிமுத்து உடன், மாயாண்டியும், குப்புசாமியும் கூடவே சென்றனர். பொட்டிக்கடை பெஞ்சில் அமர்ந்து சோடா பருகிக்கொண்டே, தங்களது உரையாடலை தொடர்ந்தனர்.
குப்புசாமி தனது கேள்வியை திருப்பியும் கேட்டார். "சொரிமுத்து, பேஸ்புக் எதுக்கு வந்துச்சுன்னு சொல்லுயா"
சொரிமுத்து ஏதோ பெரிய வரலாற்று சிறப்புரை நடத்துபவர் போல் பாவனை செய்துகொண்டு கதையை தொடர்ந்தார்.
"நம்ம ஊரு பசங்கலாம் அமெரிக்கா போய் படிக்குறானுவல. அது ஏன் அங்க போய் படிக்குறாங்கனு தெரிமா? அப்புடி நம்ம ஊருல இல்லாதது அங்கன என்ன இருக்குது?" சொரிமுத்து தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லும் பழக்கம் உடையவர் (ஹி ஹீ என்னைபோல). அதற்குள் அவசரக்குடுக்கை குப்புசாமி, "என்ன பெருசா, இங்குட்டு ஒரு கறுப்பி, அங்குட்டு ஒரு வெள்ளக்காரின்னு ரெண்டு பக்கமும் பிகரோட சுத்தலாம். என்னதான் சொல்லு பாரீன் பிகர் பாரீன் பிகர் தான்யா, என்ன இடுப்பு என்ன ஓடிப்பு".
"உன்ன மாதிரி கொஞ்சம் பொம்பள பொறுக்கி பசங்கலாளையும் ஆம்பள பொறுக்கி பொண்ணுகளாலையும் தான்யா இன்னிக்கி சோசியல் நெட்வொர்க்னாலே ஒரு கெட்ட பேரு" என்று சொரிமுத்துவிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.
மாயா: அவன் கடக்குறான்யா நீ மேல சொல்லு.
சொறி: ஆனா அவன் சொன்னதுல பெருசா தப்பு ஒன்னும் இல்லன்னு வெயி. நம்மூரு முனியம்மாவே எம்புட்டு நாள் பாக்குறதுன்னு தான் பாதி பயலுவ அமெரிக்கா படிக்க போறானுவ. அமெரிக்கால இருக்குற பெரிய யுனிவெர்சிட்டில ஹார்வர்டும் ஒன்னு. அதுல மார்க் சக்கர்பெர்க் (Mark Zuckerberg) ஒரு பயல் படிச்சுட்டு இருந்தான். கூட படிக்குற பிகர் ஒருத்திய கலாய்க்கவும், பொண்ணுங்க போட்டோ ஷேர் பண்ணவும் தான் இத ஆரம்பிச்சான். இன்டர்நெட் உலகத்துல இருக்குற பல விஷயங்கள் இந்த ஹார்வர்ட் பசங்க பண்ணினது தான். இது தவிர ஹார்வர்ட் பசங்க தான் நெறைய டெக்னாலஜில கொடி கட்டி பறக்குறாங்க. இப்புடி பட்ட ஹார்வர்ட் யுனிவெர்சிட்டி இவன் தொல்ல தாங்காம இவன விரட்டிடுச்சி. பையன் பேஸ்புக்னு ஒன்னு ஆரம்பிச்சு இன்னிக்கி பெரியாளு ஆய்ட்டான். இது பத்தி இன்னும் தகவல் வேணும்னா "Social Network" னு ஒரு படம் வந்துருக்கு, அத பாருடே.
குப்பு: எல்லாம் சரிடே. ஆர்குட்டுலேந்து எல்லாரும் பேஸ்புக் ஏன் வந்தாங்க?
சொறி: அப்புடி கேளு மக்கா.. அரிதாரம் பூசினா அசிங்கத்த கூட கால் பணத்துக்கு விக்கலாம். ஆர்குட் அசிங்கம், பேஸ்புக் அரிதாரம் பூசின அசிங்கம், அம்புடுதேன் வித்தியாசம். பொழுது போவாட்டி போய் ஜாலியா சாட் பண்ணிட்டு வரலாம். அந்த காலத்துல ஆத்தங்கரை, வூட்டு திண்ணைனு பசங்களும், சமயக்கட்டு, கூடம்னு பொண்ணுங்களும் பேசி பொழுது கழிச்சாங்க. இன்னிக்கி கம்ப்யூட்டர்ல பேசி பொழுத கொல்றாங்க. வேற ஒன்னும் பெருசா காலம் மாறல மக்கா.
குப்பு: சரிடே.. இப்போ கூகிள் பிளஸ் பத்தி சொல்லுடே.
சொறி: பேஸ்புக்குக்கு லாபமோ லாபம். ஆர்குட்ட கூகிள் வாங்கினுச்சி கொஞ்ச நாள் முன்னாடி. இன்னி தேதில ஆர்குட் மொத்தமா படுத்துடிச்சி. என்னடா ஆர்குட் படுத்துடுச்சே, மக்கள் சோசியல் நெட்வொர்க் வுட்டுபுட்டு உருப்படியா எதுனா பண்ண போய்டாங்களானு கூகிள் யோசிச்சுருக்கும் போல. இல்ல மக்கள் திருந்தலங்கறது பேஸ்புக் லாபம் பாத்து தெரிஞ்சுருக்கும். சரி நம்ம திருப்பி இழந்த லாபத்த அடையணும்னு இன்னிக்கி கூகிள் பிளஸ் ஆரம்பிச்சுருக்காங்கனு தோணுது.
மாயா: யோவ் ஆனா இந்த சோசியல் நெட்வொர்க்ல நல்ல விஷயமும் இருக்குடே. பேஸ்புக்ல நிறைய நல்ல குரூப்லாம் இருக்கு. அதுல ஈ-புக்லாம் ஷார் பண்ணிட்டு படிக்கறாங்கடே. நல்ல நல்ல விஷயம் பத்திலாம் பேசுறாங்கடே. சும்மா குறை சொல்லாதே ஹான்..
சொறி: ஆமாயா எல்லாம் இருக்கு. எவ்ளோ பேரு பண்றாங்ககறதுதான் பேச்சு.
மாயா: அது சரிதான். கூகிள் பத்தி குறை சொல்லாதடே. அது இல்லனா இன்னிக்கி உலகமே இல்ல.
சொறி: அது என்னவோ சரிதான். கூகிள் சர்ச் இல்லன்னா இன்னிக்கி எந்த பயலும் சாப்ட்வேர் எஞ்சினியர்னு சொல்லிட்டு சுத்த முடியாது.
ஆனா கூகிள்ல தமிழ் மொழில பக்கங்களை பாக்குறதுக்கு ஒரு வழி இருக்கு. அதுல நீ என்ன எழுத்து வேணாலும் அடி, உனக்கு வர்ற தேடல் உதவி வார்த்தைகள் பாலுணர்வு சம்பந்த பட்டதாதான் இருக்கும் பெரும்பாலும். இது தமிழுக்குனு இல்ல எல்லா மக்களுக்கும் பொதுவான ஒரு விஷயம் தான். மூணு பெரிய ஆசை, மண், பொன், பெண். இதுல மண், பொன் வேணும்னா உழைச்சு சம்பாதிக்கணும். பெண்ணாசை கொஞ்சம் வித்தியாசமானது. உழைச்சா மட்டும் பத்தாது இன்னும் நிறைய வித்தை தெரியனும்னு சொல்லிக்கறாங்க. அதுக்குதான் இந்த சோசியல் நெட்வொர்க்கோனு கூட தோணுது.
ஆனா நெறைய பேரு இதை உபயோகமான முறைல பயன் படுத்துறாங்க. பாடல்கள், புத்தகங்கள் ஷார் பண்ணிக்கறாங்க. அதை பாக்குறப்போ சந்தோசமா இருக்கு. உண்மையான நண்பர்கள் நிறைய பேரு எனக்குமே கடச்சு இருக்காங்க.
குப்பு: அது என்னய்யா பெண்ணாசை பத்தி சொல்ல வந்துட்டு பாதிலயே நிறுத்திப்புட்ட. மேல சொல்லுய்யா..
சொறிமுத்து மீண்டும் கோபமாகி, "யோவ் உருப்படியா எதுனா பத்தி பேசுய்யா. எனக்கு அத பத்தி இதுக்கு மேல எதுவும் தெரியாது" (எனக்கும்தான் :( )
"சரிடே எனக்கு கொஞ்சம் ஜோலி இருக்குது இப்போ, சாயங்காலமா நம்ம ஏரிக்கரைல உக்காந்து 5 மணி போல கூகிள் பிளசோட நல்ல விஷயங்கள், வசதிகள் பத்தி பேசுவோம். வரேண்டே." என்று கூறிவிட்டு கிளம்பினார்.
நாமளும் ஏரிக்கரைக்கு போவோம்.
(அடுத்த பாகத்தில் முடியும்)
No comments:
Post a Comment