தண்டப்பயல் ஆகிய நான் இனி உங்களுடன்....
இன்று முதல் இந்த ப்ளாகின் மூலமாகவும் தொந்தரவுகளைத் தரப் போகிறேன். இந்த வலைப்பூவில் உள்ள பதிவுகள் அனைத்தும் தமிழிலேயே பதிவு செய்யப்படும்.
சில சமயம் இனிமையான தென்றலாகவும், மிதமான காற்றாகவும், அவ்வப்போது பெரும் புயலாகவும் வீசும் காற்றை போல, இந்த தண்டப்பயலாகிய நானும் சில சமயம் மொக்கை கவிதையாய், சில சமயம் சிந்திக்க வைக்கும் கட்டுரையாய், தூங்க வைக்கும் கதையாய் வருவேன்.
அதிகம் பேசாமல் முகப்புரையை இத்துடன் முடித்துக் கொண்டு.. ஆஹ்ன்ன்ன் மறந்துட்டேன் ஒரு வரவேற்புக் கவிதை...
தண்டப்பயல்..
எல்.கே.ஜி யில் கிளாசில் கடைசி ரேங்க்; அக்கா சொன்னாள் தண்டப்பயல்
கடையில் சில்லறை பாக்கி வாங்க மறந்தேன்; அம்மா சொன்னாள் தண்டப்பயல்
பக்கத்துக்கு வீட்டு பெண்ணை சைட் அடித்தேன்; அப்பா சொன்னார் தண்டப்பயல்
கிரிக்கெட் மாட்சில் தோற்று போனேன்; அண்ணா சொன்னான் தண்டப்பயல்
முத்தம் கொடுக்க ரொம்ப தயங்கினேன்; காதலி சொன்னாள் தண்டப்பயல்
தண்ணி அடிக்க மாட்டேன் என்றேன்; நண்பன் சொன்னான் தண்டப்பயல்
திருமணம் வேண்டாம் என்றேன்; பாட்டி சொன்னாள் தண்டப்பயல்
வேலை தேடிக் கொண்டு இருந்தேன்; உலகம் சொன்னது தண்டப்பயல்
தண்டப்பயல் என்றால் என்னவென்று யோசித்தேன்; என்னை நானே சொன்னேன் தண்டப்பயல்
-----------------------------
கவிதை முடிஞ்சு போச்சு.. சிரிச்சுட்டு கமெண்ட் போடுங்க.. :)
nee thandapayal illa mokkapuyal ... :D
ReplyDeleteலொள் வாஞ்சி
ReplyDeleteComment
ReplyDeletelol
ReplyDeletenee thandapayal illa mokkapuyal ... :// idhu konja yosika vendiya visiyam
ReplyDelete